திட்டத்தில் சேமிப்பவரின் ஆதார் நகல் அவசியம் வேண்டும்.
திட்டத்தில் தங்கம் வாங்குபவரின் ஆதார் நகல் அவசியம் வேண்டும்.
இத்திட்டத்தில் குறைந்தபட்சம் ரூ.500/- செலுத்தி ஆரம்பிக்கலாம். எந்த தேதியில் தொடங்குகிறீர்களோ அந்தத் தேதிக்குள் அடுத்தடுத்த மாதம் தவணை செலுத்த வேண்டும்.
ரூ.500/-க்கு மேல் எவ்வளவு தொகை வேண்டுமானாலும் கட்டலாம். தேர்ந்தெடுக்கும் தொகையையே தொடர்ந்து கட்ட வேண்டும். பதினொரு தவணைகளாகக் கட்டவேண்டும் என்பது முறையாகும்.
இத்திட்டத்தில் தாங்கள் பணம் செலுத்தும் அன்றைக்கு உள்ள விலைக்கே 22ct தங்கம் எடையாக உங்கள் கணக்கில் வரவு வைக்கப்படும்.
G.S.T.வரியை, அரசு நிர்ணயிக்கும்படி வாடிக்கையாளரே செலுத்தவேண்டும்.
MONTH | AMOUNT | PAID AMOUNT (11 MONTHS)/CURRENT RATE=GOLD WEIGHT | TOTAL AMOUNT (11 MONTHS)/CURRENT RATE=TOTAL WEIGHT |
---|---|---|---|
11 | 500 | 500/7090 = g | 5,500/7090 = g |
11 | 1,000 | 1,000/7090 = g | 11,000/7090 = g |
11 | 2,000 | 2,000/7090 = g | 22,000/7090 = g |
11 | 3,000 | 3,000/7090 = g | 33,000/7090 = g |
11 | 5,000 | 5,000/7090 = g | 55,000/7090 = g |
11 | 10,000 | 10,000/7090 = g | 1,10,000/7090 = g |
11 | 20,000 | 20,000/7090 = g | 2,20,000/7090 = g |
இந்தத்திட்டத்தின் நோக்கமே தங்கச் வாங்குவது என்பதால் திட்ட முடிவில் பணமாகப் பெற முடியாது. பவுன்காசுகள், தங்க நகைகள் வாங்கிக் கொள்ளலாம்.
இத்திட்டத்தின் பயன்: 11வது மாதத் தவணைகட்டிய 30 நாட்களுக்கு பின், தாங்கள் வாங்கிய தங்க எடைக்கு உண்டான வேல்யூ அடிசனில் (VA) 100% தள்ளுபடி உண்டு.
திட்டத்தில் சரிவரக் கட்ட இயலாதவர்கள் 11 மாத கடைசியில் கட்டிய தொகைக்கு நிகரான தங்கத்தைப் பில்லில் கழித்துக் கொள்ளலாம். வேல்யூ அடிசனில் (VA) 100% தள்ளுபடி என்ற பயனை அடைய முடியாது. அதேசமயம் கட்டிய தொகைக்கு ஈடான நகைகள் கிடைக்கும்.
பாஸ்புக் காணாமல் போனால் நிறுவனத்தில் தெரியப்படுத்தி உரிய ஆவணங்கள் கொடுத்து டூப்ளிகேட் பாஸ் புக் பெற்றுக்கொள்ளலாம்.
நீங்கள் வாங்கிய தங்க எடையை விடக் கூடுதல் எடையில் நகை தேர்ந்தெடுத்தால் கூடுதல் எடைக்கு மட்டும் எப்போதும் போல வேல்யூன் அடிசனில் (VA) சேர்க்கப்படும்.
காலச் சூழ்நிலைக்கு ஏற்பத் திட்டத்தின் விதிமுறைகளை மாற்றுவதற்கு நிறுவனத்திற்கு உரிமை உண்டு.
ஏதாகிலும் வழக்குகள் ஏற்படுமாயின் அது தமிழ்நாடு, ஈரோடு மாவட்ட, நீதிமன்றங்களின் வரம்பிற்கு உட்பட்டே அமையும்.